World Tamil Blog Aggregator Thendral: என்ன தப்பு?

Thursday 11 September 2014

என்ன தப்பு?



இன்று வகுப்பில் சமூகத்தில் பெண் குழந்தைகட்கு வரும் பாதிப்புகளைக்கூறி ஆபத்திற்கு உதவ,உன்னைத் தற்காத்துக் கொள்ள என்னன்ன செய்யலாம் என்ற கலந்துரையாடலில் குழந்தைகளின் பதிலாய்..ஒரு குரல்.மிளகாய்த்தூள் வச்சுக்கலாம்மா...இல்லம்மா..கத்தி வச்சுக்கலாம்மா..என்றது வேறு ஒரு குரல்...1098க்கு போன் பண்ணலாம்மா என்றது ஒரு குரல்...வேண்டாம்மான்னு ஓங்கி ஒலித்தது...ஒரு குரல் அனைவரும் நோக்க, ஆசிட் வச்சுக்கலாம்மா...அதிர்ந்து போனேன்....அன்பான குழந்தைகளின் உலகம் ..இப்படியா மாறுவது...தப்பும்மா என்றேன்...ஏம்மா தப்பு ஆண்கள் மட்டும் தன் சுயநலத்துக்காக முகத்துல ஊத்தி எத்தன பெண்கள வீணாக்குனாங்க ...நாங்க எங்க தற்காப்புக்கு வச்சுக்கிட்டா என்ன தப்பு..?
வன்முறைக்கு வன்முறைத் தீர்வல்லம்மா என.....
அப்போதைக்கு குழந்தைகளை மடை மாற்றி விட்டேன் ..ஆனால்.....?!

7 comments :

  1. வருத்தமாகத்தான் இருக்கிறது இன்றைய தலைமுறையினரின் சிந்தனை.

    ReplyDelete
  2. பிஞ்சின் கேள்வி சரிதானே..ஆனால் அது தீர்வாகுமா? தீர்வின் பாதையில் ஒரு படியாகுமோ?

    ReplyDelete
  3. ஒரு கேவலமான உலகத்தில் நாம் வாழ்கிறோம் சகோதரி.
    குழந்தைகளைக் கூட கொடுமை தவறல்ல என்று நம்பவைக்கும் கேவலமான உலகம்!... இதில் உங்களைப் போலும் சமூக உணர்வுள்ள ஆசிரியர்-படைப்பாளிக்குப் பணிகள் நிறைய உள்ளன என்பதைத்தான் உங்கள் குழந்தைகளின் பதிலில் நான் புரிந்துகொண்டேன். ஆசிரியராக “...ஆனால்” என நிறுததிவிட்டீர்கள். ஒரு படைப்பாளியாக உங்கள் பேனாவே பதில் சொல்ல வேண்டும் கவிஞரே! சொல்லுங்கள் என்ன செய்யலாம்? அதை நம் குழந்தைகளுக்கும் புரிய வைக்க உங்கள் ஆசிரியர்க்கு அந்தப் படைப்பாளி உதவக் கூடும். சொல்லுங்கள்.. அவசரமில்லை நிதானமாக..உறுதியாக.

    ReplyDelete
  4. நடப்பைக்கேட்கிற குழந்தை,குழந்தைகள் எதையுமே உற்றுக்கவனிக்கிறார்கள்.

    ReplyDelete
  5. நியாயமான கேள்விகள் தான், தவறு செய்ய நினைத்தாலே தவறிழைத்தது போலத்தான். சிலருக்கு இப்படி தண்டனை அளிக்காததினால் தான் இன்றைக்கு அவ்வாறு கேள்வி கேட்கும் நிலை வந்துவிட்டது...

    ReplyDelete
  6. இன்றைய இளம் பிஞ்சுகளின் எண்ணம் வருத்தமளிக்கிறது சகோதரியாரே

    ReplyDelete
  7. குழந்தையின் வினாவில் தவறில்லை, எதிரில் தன்னை அழிக்க வரும் மிருகத்திடமிருந்து காத்துக்கொள்ள எதிர்த்து நிற்பது இயல்பே!

    இன்று நமக்கு அகிம்சையை வளர்த்த காந்தியடிகள் தேவையில்லை, எதிர்த்துப் போராடிய சுபாஸ் சந்திரபோஸே தேவை...
    இது அழகான உலகம், இங்குள்ளவர்கள் அனைவரும் நல்லவர்கள் என்று குழந்தைகளுகளிடத்தில் பொய்யுரைப்பதைவிட இன்றுள்ள சமூக அவலங்களைச் சுட்டிக் காட்டி, இதுபோன்ற இடர்களை எதிர்க்கக் கற்றுக் கொடுப்பதே சாலச்சிறந்தது. அவர்களின் மனவலிமையை வளர்க்கச் செய்தல் வேண்டும்.

    சமூகத்தில் இன்றைய பெண்களின் நிலை என்ற தலைப்பில் நான் எழுதிய கட்டுரை இதோ தங்கள் பார்வைக்கு:

    http://entamilpayanam.blogspot.ae/2016/03/blog-post_1.html

    ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...